இஸ்ரேலுக்கு பயணிப்பதை தவிர்க்கவும் : இந்திய பிரஜைகளுக்கு வலியுறுத்தல்!
ஈரான் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு ஆகிய இரண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் என்ற அறிவிப்பால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மோதல்கள் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பென்டகனின் கூற்றுப்படி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கூடுதல் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை நிலைநிறுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும்.
எதிரி தாக்குதல்களில் இருந்து இஸ்ரேலை பாதுகாப்பதற்கு இது ஆதரவாக உள்ளது.
கூடுதல் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்ட போர்க்கப்பலை நிலைநிறுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே அமெரிக்கா இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் சூடுபிடித்துள்ள நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பயணத்தின் போது மிகவும் கவனமாக இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் இந்திய பிரஜைகளுக்கு அறிவுறுத்துகிறது.
மேலும் நாட்டில் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.