செய்தி தமிழ்நாடு

விழுப்புரத்தில் முன் விரோதம் காரணமாக அதிமுக நகர கழக செயலாளர் மீது தாக்குதல்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அதிமுக நகர கழக செயலாளராக வெங்கடேசன் என்பவர் கட்சிப்பதவிகித்து வருகிறார்.

இவருக்கும் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் SBI வங்கி எதிரில் டீக்கடை நடத்திவரும் ராஜேந்திரன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்கனவே பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு வெங்கடேசன் வங்கியில் ஏடிம் மையத்திற்க்கு பணம் எடுக்க சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் வெங்கடேசன் இடம் பிரச்சினை செய்துள்ளனர்.

அப்போது ராஜேந்திரன் மரக்கட்டையால் வெங்கடேசன் தலையில் பலமாக தாக்கியதில் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட வெங்கடேசன் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர் ராஜேந்திரன் கல்லால் வெங்கடேசன் தலையில் தாக்கியதில் பலத்த ரத்த காயம் அடைந்த வெங்கடேசனை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த தகவலின் பெயரில் செஞ்சி காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ராஜேந்திரனை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் வெங்கடேசனுக்கும் ராஜேந்திரனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்ததாக தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த செஞ்சி போலீசார் ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ராஜேந்திரன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி கல்பனாவை செஞ்சி போலீசார் தேடி வருகின்றனர்.

அதிமுக செஞ்சி நகர கழக செயலாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தால் செஞ்சி பகுதியில் பரபரப்பு நிலவுகிறது

(Visited 5 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி