எதிர்க்கட்சிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் பாதாள உலகக் குழு
பாதாள உலக குழுக்களே எதிர்க்கட்சிகளுக்கு புகலிடம் வழங்குவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (25) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
யுக்திய நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதனால்தான் பொலிஸ் மா அதிபரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவதாகவும் அமைச்சர் கூறினார்.
பொலிஸ் மா அதிபர் தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு பற்றி பேசாமல் பொலிஸ் மா அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் பேசினால் எதிர்க்கட்சிகளின் உண்மையான ஆர்வம் தெரியவரும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.