500 இந்தியர்களை பணிநீக்கம் செய்த அமேசன் நிறுவனம்!
உலகின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான அமேசன், 500 இந்திய ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
இந்தியாவில் அமேசன் நிறுவனத்தின் வளர்ச்சி மந்தக்கதியில் செல்வதாக கூறப்பட்ட நிலையில், மேற்படி பணிநீக்க நடவடிகை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பணிநீக்க செயல்முறை மேலும் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வலைதள சேவைகள், மனித வளம் உள்ளிட்ட துறைகளின் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை அமேசன் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 18 ஆயிரம் ஊழியர்களையும், மார்ச் மாதம் 9 ஆயிரம் ஊழியர்களையும் பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 20 times, 1 visits today)