வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை எச்சரிக்கை
ஆறு மாகாணங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான ‘ஆம்பர்’ வானிலை எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
மேற்கு, மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேலும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என அது மேலும் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு பின்வரும் நடவடிக்கைகள் உட்பட போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
• இடியுடன் கூடிய மழையின் போது நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிப் பகுதிகளைத் தவிர்க்கவும்.
• இடியுடன் கூடிய மழையின் போது கம்பியில் இணைக்கப்பட்ட தொலைபேசிகள் மற்றும் இணைக்கப்பட்ட மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
• சைக்கிள்கள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்தவெளி வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
• மரங்கள் மற்றும் மின்கம்பிகள் விழுந்து கிடப்பதில் எச்சரிக்கையாக இருங்கள்
• அவசர உதவிக்கு உள்ளூர் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும்