இலங்கை முழுவதும் மீண்டும் போராட்டங்கள் இடம்பெறலாம் என புலனாய்வினர் தகவல்!
நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்த சில கட்சிகளும், அமைப்புகளும் தயாராகி வருவதாக புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இம்மாத்தின் நடுத்தரப் பகுதியில் இருந்து போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மின் கட்டண உயர்வு, எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வு, அடுத்த ஆண்டு முதல் வட் வரி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, சுகாதார சேவை குறைபாடுகள் என பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டி இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முழுமையான அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என புலனாய்வு அமைப்புகளின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 6 times, 1 visits today)