சிட்னி நகரில் வாரத்திற்கு சுமார் 500 பேருந்து பயணங்கள் ரத்து – நெருக்கடியில் மக்கள்

சிட்னி நகரில் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஓட்டுநர்கள் பற்றாக்குறையால் வாரத்திற்கு சுமார் 500 பேருந்து பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
சில பகுதிகளில் கடும் காலதாமதம் ஏற்படுவதாகவும், குறித்த நேரத்தில் வரும் பேருந்துகளின் சதவீதம் 88 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
போதிய சம்பளம் இன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிட்னி பேருந்து ஓட்டுநர்கள் வேறு வேலைகளுக்குத் திரும்புவதால் ஏற்படும் காலிப் பணியிடங்கள் முறையாக நிரப்பப்படாததே இதற்கு முதன்மைக் காரணம்.
மாநில அரசு பல்வேறு சலுகைகள் அளித்தாலும் ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
(Visited 11 times, 1 visits today)