இத்தாலியில் யூடியுபரால் பறிபோன உயிர் – பரிதாபமாக பலியான சிறுவன்
இத்தாலியில் YouTube தளத்திற்காக எடுக்கப்பட்ட காணொளியால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த 14ஆம் திகதி Lamborghini சொகுசுக் காரை ஓட்டிக்கொண்டே காணொளி எடுத்தவர்கள் இன்னொரு கார் மீது மோதியதில் அதில் இருந்த 5 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இத்தாலியின் ரோம் நகரில் நடந்த அந்தச் சம்பவத்தில் சிறுவனின் தாயாரும் சகோதரியும் காயமுற்றதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்தது.
அந்தச் சொகுசுக் காரில் இருந்த 5 பேரில் மூவர் “Theborderline” என்ற குழுவைச் சேர்ந்தவர்கள்.
தொடர்ந்து 50 மணி நேரம் காரில் செலவிடும் சவாலில் அவர்கள் பங்கெடுத்துக்கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
புதிய சட்டத்தைக் கொண்டுவரலாம். ஆனால் சில முட்டாள்தனமான நடவடிக்கைகளை ஒன்றும் செய்யமுடியாது என்று இத்தாலியின் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.