மலேசியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கையின் இளம் தம்பதியினர் பலி

மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பிரஜைகள் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மலேசியாவில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரிந்ததாகக் கூறப்படும் 33 மற்றும் 35 வயதுடைய திருமணமான தம்பதியினர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கோலாலம்பூர் நகரில் மற்றொரு வாகனம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், விபத்தின் போது காரில் இருந்த தம்பதியின் மகள் காயமின்றி தப்பியதாக கூறப்படுகின்றது. அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, உயிரிழந்தவர்களின் சடலங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
(Visited 13 times, 1 visits today)