வேரகொட பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் பலி

வெல்லம்பிட்டிய, வேரகொட பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 6 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
காயமடைந்த மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த ஐந்து மாணவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் ஒரு மாணவர் சிறுவர் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தரம் ஒன்றில் கல்வி பயின்று வந்த மாணவரே சம்பவத்தில் உயிரிழந்தார்.
(Visited 13 times, 1 visits today)