அயோத்தியில் குளிர்பானத்தை வாங்கிக் கொண்டு ஐபோனை கொடுத்த குரங்கு…! (வைரலாகும் வீடியோ)
ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்காக விழாக்கோலம் பூண்டுவரும் உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் பக்தரிடம் இருந்து குரங்கு ஒன்று ஐபோனை தூக்கிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது மதுரா நகரம். இது 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதன் அருகிலேயே யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது பிருந்தாவனம். இங்கு கிருஷ்ணன் தனது இளமைப் பருவத்தைக் கழித்ததாகவும், பல லீலைகள் செய்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. இதுவும் திவ்யதேசங்களில் ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக, பிருந்தாவனத்தில் எப்போதும் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். இந்தப் பகுதியில் குரங்குகளின் எண்ணிக்கையும் அதிகம். அங்கு வரும் பகதர்களின் உடைமைகளை அந்த குரங்குகள் தூக்கிச்செல்வதும் வழக்கம்.
அந்த வகையில் கடந்த 6ம் திகதி பிருந்தாவனத்துக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவரின் ஐபோனை அங்கு வட்டமடித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று தூக்கிச் சென்றது. அதைச் சிலர் துரத்திச் சென்ற போது யார் கைக்கும் சிக்காமல் பிருந்தாவன மதில் சுவரின் மீது ஏறிக்கொண்டது.
இதனால், ஐபோனை பறிகொடுத்த பக்தர் செய்வதறியாது திகைத்து நின்றார். அப்போது அங்கிருந்த மற்றொரு பக்தர் புத்திசாலித்தனமாக யோசித்து மதில் மேல் அமர்ந்திருந்த குரங்கிற்குக் குளிர்பான பாட்டில் ஒன்றை தூக்கிப்போட்டார். முதலில் போடும்போது குரங்கு அதை கவனிக்காமல் விட்டுவிட்டது. அதனால் இன்னொரு முறையும் குளிர்பான பாட்டிலை தூக்கிப் போட்டார் அந்த நபர்.
இம்முறை குளிர்பான பாட்டிலை கச்சிதமாக கேட்ச் பிடித்த குரங்கு, தனது கையில் இருந்த ஐபோனை விட்டுவிட்டது. இந்தச் சம்பவம் முழுவதையும் அங்கிருந்த இன்னொரு நபர் லைவாக வீடியோ எடுத்திருக்கிறார். அந்த வீடியோவை அந்த நபர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். கிட்டத்தட்ட 10 நாட்கள் கழித்து, அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/C1w_JhTvOaU/?utm_source=ig_web_copy_link