இலங்கை

இலங்கையில் 9 வயது சிறுவன் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்திய 14 வயது சிறுவன்

14 வயது சிறுவன் ஒருவர் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த 9 வயது சிறுவன் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

சம்பவத்தின் பின்னர் 14 வயது சிறுவனும் விஷம் குடித்ததால் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

ஹம்பாந்தோட்டை – அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (05) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அயல் வீடுகளில் வசிக்கும் 2 சிறுவர்களும் நண்பர்களாவர்.9 வயதுடைய சிறுவனின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

9 வயதுடைய சிறுவனின் உடலில் 6 அல்லது 7 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 14 வயது சிறுவன் வீடியோ கேம்களுக்கு கடுமையாக அடிமையாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 வயதுடைய சிறுவனின்ன வீட்டில் பணம் திருடப்பட்டமை தொடர்பில் 14 வயது சிறுவனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content