பொழுதுபோக்கு

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் வெட்டிக் கொலை! கதறி அழுத பா.ரஞ்சித் – சென்னையில் பரபரப்பு!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதை சற்றும் எதிர்பாராத ஆம்ஸ்ட்ராங் நிலைதடுமாறி அங்கேயே கீழே விழுந்தார். இதை பார்த்ததும், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். மர்ம நபர்கள் தப்பி ஓடியதை அடுத்து துடிதுடித்த ஆம்ஸ்ட்ராங்கை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங் மருத்துவமனை செல்வதற்குள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

https://x.com/News18TamilNadu/status/1809251349718032675

சென்னை கிரீன்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணையை துவங்கி உள்ளனர். மேலும், தப்பி சென்ற கொலையாளிகளை தேடும் பணிகளை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ராங் படுகொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து கதறி அழுதபடி மருத்துவமனைக்கு வந்தார் இயக்குநர் பா.ரஞ்சித்.

இயக்குநர் பா.ரஞ்சித், பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கோடு நெருங்கிய நட்பு கொண்டவர். ரஞ்சித் நடத்தி வரும் ‘மார்கழியில் மக்களிசை’ உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார் ஆம்ஸ்ட்ராங்.

அதேபோல பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் பேசியுள்ளார் பா.ரஞ்சித். இந்நிலையில் தனது நண்பரின் உயிரிழப்பால் கதறி அழுதுள்ளார் பா.ரஞ்சித்.

(Visited 79 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!