சீனா சென்ற அமெரிக்க இராஜாங்க செயலாளர் – தைவான் அருகே பறந்த போர் விமானங்களால் பதற்றம்
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் தனது சீனப் பயணத்தை முடித்துக் கொண்ட ஒரு நாளுக்குப் பிறகு, தைவான் அருகே சீன இராணுவ நடவடிக்கை புதுப்பிக்கப்பட்டதாக தைவான் குற்றம் சாட்டுகிறது.
அதன்படி, ஏப்ரல் 27ஆம் திகதி உள்ளூர் நேரப்படி காலை 9:30 மணி முதல் 30 போர் விமானங்கள் உட்பட 22 சீன இராணுவ விமானங்கள் அதன் தீவு அருகே பறந்ததாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதில் 12 போர் விமானங்கள் தைவானின் வடக்கு மற்றும் மையக் கோட்டின் குறுக்கே பறந்ததாகவும் அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
முறையான இராஜதந்திர உறவுகள் இல்லை என்றாலும், தைவானின் மிக முக்கியமான சர்வதேச ஆதரவாளர் மற்றும் ஆயுத சப்ளையர் அமெரிக்கா என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், சீனாவில் இருந்தபோது, தைவான் ஜலசந்தி முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதாக அந்தோனி பிளிங்கன் கூறினார்.
ஜனநாயக நாடான தைவானை தனது பகுதி என்று சீனா கூறுகிறது. எனவே, தைவான் மீது சீனா இராணுவ அழுத்தத்தை பிரயோகித்து வருகிறது. எனினும், சீனாவின் தலையீட்டை உறுதியாக நிராகரிப்பதாக தைவான் கூறுகிறது