இலங்கையில் வீதியில் பயணித்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
வீதியில் பயணித்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபா பெறுமதியான தங்க நகையை அபகரித்த நிலையில் தலத்துஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி மற்றும் முல்லைத்தீவில் உள்ள இராணுவ முகாம்களில் கடமையாற்றும் இராணுவத்தினர் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று, இவ்வாறு அபகரித்து சென்றுள்ளனர்.
இவர்களில் ஒருவர் முல்லைத்தீவு பகுதியிலுள்ள இராணுவ முகாமிலும் மற்றையவர் கண்டி இராணுவ முகாமிலும் பணிபுரிவதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தலத்துஓயா பகுதியைச் சேர்ந்த பெண் வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் குறித்த பெண்ணின் நகையை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
(Visited 3 times, 1 visits today)