2026 ஆம் ஆண்டுக்குள் புதிய முயற்சி – மஸ்க்கின் மாபெரும் திட்டம்

2026ஆம் ஆண்டு இறுதிக்குள் ஆளில்லா விண்கலனை செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்ப எலோன் மஸ்க் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஆளில்லா Starship விண்கலனைத் தயாரிக்கும் காலத்திட்டத்தை காணொளியாக பகிர்ந்த மஸ்க் இதனை குறிப்பிட்டுள்ளார்.
2 நாள்களாக மஸ்க்கின் SpaceX நிறுவனத்தின் விமானங்களிலும் விண்கலன்களிலும் கோளாறுகள் ஏற்பட்டன.
இதற்கிடையே மஸ்க் டிரம்பின் நிர்வாகத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அங்கு அவர் அரசாங்கச் செயல்திறன் பிரிவில் ஆலோசகராகப் பணிபுரிந்தார்.
அவர் நிறுவிய SpaceX, Tesla போன்ற நிறுவனங்களில் மேலும் கவனம் செலுத்தப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2026ஆம் ஆண்டுக்குள் ஆளில்லா விண்கலனை செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்புவது கடினம். எனினும் அந்த இலக்கைச் சாதிக்கத் தவறினால் இரண்டு வருடங்களுக்குப் பின் மீண்டும் முயற்சி எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.