இலங்கை: 17 முறை மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரிடம் நான் ஏன் ஆலோசனை பெற வேண்டும்?: ரணிலுக்கு ஹரிணி பதில்!
17 தடவைகள் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போன்ற ஒருவரின் ஆலோசனையை நான் ஒருபோதும் பெறமாட்டேன் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் அடிப்படையான ‘மக்கள் ஆணையை’ புரிந்து கொள்ளாத ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்பை கற்பிக்க முன்வருவது பெரிய நகைச்சுவை என பிரதமர் கூட்டத்தில் தெரிவித்தார். ரணிலிடம் நான் ஒருபோதும் அறிவுரை பெறமாட்டேன்.17 முறை மக்களால் நிராகரிக்கப்பட்டவர்.. விடாமல் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறார்.. மக்கள் மாறிவிட்டார்கள் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. […]