நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 59 பேர் பலி, 36 பேர் காயம்
நேபாளத்தில் இடைவிடாத மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சனிக்கிழமை பிற்பகல் வரை குறைந்தது 59 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 36 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை முதல் பெய்த மழையால் ஏற்பட்ட பேரழிவுகளில் மொத்தம் 44 பேர் காணாமல் போயுள்ளனர், மேலும் நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1,252 பேரை பொலிஸார் மீட்டுள்ளனர் என்று நேபாள காவல்துறை செய்தித் தொடர்பாளர் டான் பகதூர் கார்க்கி தெரிவித்தார். மொத்த உயிரிழப்புகளில், 34 இறப்புகள் […]