இன்றிரவு முதல் பூமியைச் சுற்றிவரவுள்ள இரண்டாவது நிலா
பூமி இன்றிரவு (செப்டம்பர் 29) புதிய, தற்காலிக ‘குட்டி நிலா’வைப் பெறவிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.‘2024 PT5’ என்பது அதன் பெயர். நிலாவின் விட்டம் 3,476 கிலோமீட்டர் எனும்போது இந்தக் குட்டி நிலாவின் விட்டம் ஏறக்குறைய 10 மீட்டர் மட்டுமே. நிலாவைவிட 350,000 மடங்கு சிறிது என்பதால் இது கண்களுக்குப் புலப்படாது. சிறப்புத் தொலைநோக்கி மூலம்தான் காணமுடியும்.இயற்கையான முறையில் கோள்களைச் சுற்றிவரும் எந்தவொரு பொருளும் அக்கோளின் நிலா என்று அழைக்கப்படுவது வழக்கம். சனிக் கோளுக்கு இத்தகைய 146 நிலாக்கள் […]