இலங்கை செய்தி

மகளுக்கு சூடு வைத்த தாய் கைது

  • September 29, 2024
  • 0 Comments

முன்பள்ளிக்கு செல்ல மறுத்த 5 வயது மகளை சூடு வைத்த தாயை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். கண்டி, நாகஸ்தான பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த 30 வயதுடைய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுமியின் உடலை கரண்டியால் சூடாக்கி சுட்டுவிட்டதாக பொலிசார் தெரிவித்தனர். காயமடைந்த சிறுமி தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சிறுமியின் உடலில் 04 இடங்களில் தீக்காயங்கள் காணப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட தாய் நீதிமன்றத்தில் […]

இலங்கை செய்தி

பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் உயிர்மாய்ப்பு

  • September 29, 2024
  • 0 Comments

பிரான்ஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த நபர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். இருபாலை பகுதியை சேர்ந்த விஜயரட்ணம் யோகேஸ்வரன் (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த நபர் பிரான்ஸ் நாட்டில் நீண்ட காலமாக வசித்து வந்த நிலையில்,கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் யாழ்ப்பாணம் வந்திருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். மரண விசாரணையின் போது , மனவிரக்தியில் காணப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

சுமந்திரன் அணியுடன் ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது

  • September 29, 2024
  • 0 Comments

சுமந்திரன் தலைமையிலான அணியுடன் ஒருபோதும், ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது என தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என். சிறீகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பிலேயே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் வெளியேறியவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என புன்முறுவலோடு சுமந்திரன் அழைப்பு விடுத்திருக்கிறார். அவருக்கு நாங்களும் புன்முறுவலோடு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளோம். அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் மக்களின் பிரதிநித்துவத்தை தக்கவைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழரசுக் […]

இலங்கை

இலங்கை: சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

  • September 29, 2024
  • 0 Comments

ஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினத்தை முன்னிட்டு 12 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் இலவசமாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை வளாகத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணிவரை பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியா செய்தி

IMF ஒப்பந்தத்தின் கீழ் பல மாற்றங்களை மேற்கொள்ளும் பாகிஸ்தான் அரசாங்கம்

  • September 29, 2024
  • 0 Comments

நிர்வாகச் செலவினங்களைக் குறைக்கும் முயற்சியில், 7 பில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தின் கீழ் IMF உடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, 150,000 அரசாங்கப் பதவிகளை அகற்றவும், ஆறு அமைச்சகங்களை மூடவும், மேலும் இரண்டு அமைச்சகங்களை இணைக்கவும் பணப் பற்றாக்குறை உள்ள பாகிஸ்தான் அறிவித்துள்ளது. செப்டம்பர் 26 அன்று சர்வதேச நாணய நிதியம் இறுதியாக உதவித் தொகுப்புக்கு ஒப்புதல் அளித்தது மற்றும் செலவினங்களைக் குறைத்தல், வரி-ஜிடிபி விகிதத்தை அதிகரிப்பது, விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற […]

செய்தி தென் அமெரிக்கா

கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 8 வீரர்கள் பலி

  • September 29, 2024
  • 0 Comments

வெனிசுலா எல்லைக்கு அருகே மனிதாபிமான பணிக்காக சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் எட்டு கொலம்பிய வீரர்கள் உயிரிழந்ததாக ஜனாதிபதி தெரிவித்தார். இந்த எட்டு பேரும் விச்சாடாவின் கிழக்குப் பகுதியில் ஒரு பணியில் இருந்ததாக ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ X இல் பதிவிட்டார். குமரிபோ நகராட்சியில் உள்ள ஒரு கிராமப்புற பகுதியில் தேடுதலுக்குப் பிறகு ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது, உயிர் பிழைத்தவர்கள் யாரும் இல்லை. மீட்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, ​​பணியாளர்களின் குடும்பங்கள் ஆதரவைப் பெற்றதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

இலங்கை

இலங்கை: நிதி மோசடி! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • September 29, 2024
  • 0 Comments

வங்கிகளால் வழங்கப்படும் OTPயினை பிறரிடம் பகிர வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீப காலமாக அதிகளவான நிதி மோசடிகள் பதிவாகிவரும் நிலையில் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

விளையாட்டு

ஆஸ்திரேலியா அணிக்கு 310 இலக்கு

  • September 29, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்றுள்ளன. இந்நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி பிரிஸ்டோலில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதலே அந்த அணி அதிரடியில் இறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த நிலையில் […]

ஆன்மிகம்

ஐ.நா. சபையில் இந்தியா: நிரந்தர உறுப்பு நாடாக ரஷியா ஆதரவு

  • September 29, 2024
  • 0 Comments

சர்வதேச அளவில் தற்போது மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து வரும் இந்தியாவை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. எனினும், சீனா இதற்கு உடன்படவில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்த கருத்தை ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் வலியுறுத்தின. இந்த நிலையில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக்க ரஷியா ஆதரவு தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்கு இடமின்றி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உலகளாவிய […]

மத்திய கிழக்கு

நஸ்ரல்லாவின் இறப்பை அடுத்து ஹிஸ்புல்லாக்களின் அடுத்த தலைவராகும் ஹஷேம் சஃபிதீன்

  • September 29, 2024
  • 0 Comments

லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து அந்த இயக்கத்தின் அடுத்த தலைவராக ​ஹஷேம் சஃபிதீன் அறிவிக்கப்பட்டுள்ளார். சஃபிதீன் சுமார் 32 ஆண்டுகள் ஹிஸ்புல்லாக்களின் தலைவராக இருந்த நஸ்ரல்லாவின் உறவினராவார். இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சஃபிதீனும் கொல்லப்பட்டத்தாக முதலில் தகவல் வெளியான நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. உருவ ஒற்றுமையில் நஸ்ரல்லாவைப் போலவே இருக்கும் சஃபிதீன் ஹிஸ்புல்லா அமைப்பில் ஆரம்பம் […]