இலங்கை

இலங்கையில் VAT வரி அதிகரிப்பு: Dialog நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) 15% இலிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டதன் காரணமாக, அனைத்து மொபைல், மொபைல் பிராட்பேண்ட், கட்டண தொலைக்காட்சி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் ஆகியவற்றுக்கு பொருந்தும் வரிகள் அதற்கேற்ப, 01/1 /2024 முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. Dialog Axiata ஏற்கனவே தனது வாடிக்கையாளர்களுக்கு Vat விகிதங்களின் அதிகரிப்பு காரணமாக விலைகள் எவ்வாறு மாறும் என்பது குறித்த குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”அரசாங்கம் அறிவித்ததன் படி பெறுமதி சேர் வரி (VAT) […]

இலங்கை

திருகோணமலையில் 17 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞருக்கு நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவு!

  • December 30, 2023
  • 0 Comments

திருகோணமலை- கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற நீதவானின் வாசஸ்தலத்தில் இன்று (30.12) குறித்த சந்தேக நபரை ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் கோமரங்கடவல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரிய […]

ஐரோப்பா

கருங்கடலில் கடற்படை மையத்தை இழக்கும் அபாயத்தில் ரஷ்யா

ஆக்கிரமிக்கப்பட்ட தீபகற்பத்தில் உக்ரைன் தாக்குதல்களை முடுக்கிவிட்டதால், இப்போது ஜனாதிபதி புடின் முதன்மையான கடற்படை மையத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளார். கிரிமியாவை புடின் இணைத்துக் கொண்ட கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, அங்கு கடற்படையின் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் ரஷ்யா தனது கப்பல்களை மேலும் சேதப்படுத்தும் பாதையில் இருந்து நகர்த்துவதற்கு தயாராகியுள்ளது. கருங்கடல் கடற்படையின் இருப்பிடம் குறித்து ரஷ்யா கருத்து தெரிவிக்கவில்லை, உக்ரேனிய ஆயுதப்படைகளின் கூற்றுப்படி, உக்ரைனின் முழு அளவிலான படையெடுப்பிற்கு புடின் உத்தரவிட்டதிலிருந்து ரஷ்யா குறைந்தது 20 […]

இலங்கை

இலங்கையில் தவறுதலாக செலுத்தப்பட்ட வாயுவால் பறிபோன உயிர்!

  • December 30, 2023
  • 0 Comments

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆக்சிஜனுக்கு பதிலாக கரியமில வாயு கொடுக்கப்பட்டதால் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன வைத்தியசாலை பணிப்பாளரிடம் அறிக்கை கோரியுள்ளார்.  

இலங்கை

இலங்கைக்கு டிசம்பர் மாதம் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!

  • December 30, 2023
  • 0 Comments

இந்த டிசம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கடந்த 4 வருடங்களில், ஒரு மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்த டிசம்பர் மாதத்தில் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் இலக்கு இருந்தது, இந்த ஆண்டு இறுதிக்குள் இலக்கை எட்ட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை

இலங்கையில் பல பாடசாலைகளை சுற்றி போதைபெருள் மீட்பு

  • December 30, 2023
  • 0 Comments

பாடசாலையைச் சுற்றியுள்ள 500 மீற்றர்களை சோதனையிட்ட போது போதைப்பொருள்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 3,183 பாடசாலைகளை இலக்கு வைத்து, குறித்த பாடசாலைகளை சுற்றியுள்ள 500 மீட்டர் தூரம் வரை இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பில் 217 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சோதனையின் போது 95 கிராம் ஹெரோயின், 7130 கிராம் கஞ்சா, 85 சட்டவிரோத சிகரெட், 16,561 போதை மாத்திரைகள், 48 கிராம் ஐஸ் […]

இலங்கை

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும் – இ.சாணக்கியன்

  • December 30, 2023
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும். தற்போது வரை அதில் எந்த மாற்றமும் இல்லை. எங்களுடைய மனங்களில் மாநாட்டை ஒத்திவைக்கின்ற எண்ணம் இல்லை என்று அக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (29) வெள்ளிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.மேலும் தெரிவிக்கையில்,”இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு நான் அறிந்தவரையில் திட்டமிட்டபடி ஐனவரி […]

பொழுதுபோக்கு

தந்தை இறப்பிற்கு பின்பு ஷண்முக பாண்டியன் போட்ட முதல் பதிவு….

  • December 30, 2023
  • 0 Comments

கேப்டன் விஜயகாந்த் மரணத்தின் துக்கத்தில் இருந்து அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் இன்னும் மீளாவில்லை. தற்போது விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், “உங்களின் இதயபூர்வமான இரங்களுக்கு எங்களின் நன்றிகள். நீங்கள் கொடுத்த ஆதரவு அனைத்துமே என்னுடைய அப்பா எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் என்பதை காட்டிக்கிறது”. “இந்த கடுமையான நேரத்தில், உங்களுடைய எங்கள் குடும்பத்திற்கு ஆறுதலை கொடுத்துள்ளது என்று சண்முக பாண்டியன் கூறியுள்ளார்.

இலங்கை

”ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் நாட்டை விட்டு செல்வதற்கான வாய்ப்புகள்” : இரா.சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்திய அதிகாரிகள் இல்லாமல் போனதற்கான காரணம் இந்த மாவட்டத்தில் இருக்கும் சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் எந்தவித நடவடிக்கையினையும் முன்னெடுக்காமல் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சித்துக்கொண்டிருப்பதுதான் அரசியல் தீர்வினை அடையும் திட்டம் என அவர்கள் கருதுவார்களானால் மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடத்தினை புகட்டுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். […]

உலகம்

அமெரிக்காவில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள சட்டம்!

  • December 30, 2023
  • 0 Comments

அமெரிக்க ராணுவத்தில் அதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதலுக்கு தீர்வு காணும் நோக்கில் புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொலை, கற்பழிப்பு மற்றும் குடும்ப வன்முறை வழக்குகளை விசாரிக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க சுதந்திரமான வழக்கறிஞர்களுக்கு சட்டம் அதிகாரம் வழங்கும் வகையில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டள்ளது. அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், இந்த சட்டத்தை ஒரு வரலாற்று சீர்திருத்தம் […]