இலங்கை

அம்பிட்டிய சுமணரட்ன தேரருக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்ததுள்ள உத்தரவு

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தாக்குதல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 20 ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (31) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது தேரர் ஊடகங்களுக்கு வழங்கிய செவியை இறுவெட்டில் ஒப்படைக்குமாறு நீதவான் பொலிசாருக்கு உத்தரவிட்டு எதிர்வரும் 20 ம் திகதி வழக்கு விசாரணைக்கு ஒத்திவைத்துள்ளார். கடந்த 25ம் திகதி புதன்கிழமை […]

ஐரோப்பா

பிரெஞ்சு மக்களிடையே உணவுப்பொருட்கள் கொள்முதல் அதிகரிப்பு

விலை அதிகரிப்பு காரணமாக மக்களிடையே குறைந்திருந்த உணவுப்பொருகள் கொள்முதல், செப்டம்பர் மாதத்தில் ஓரளவு சீரடைந்துள்ளதாக INSEE கருத்துக்கணிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. சென்ற செப்டம்பர் மாதத்தில் இந்த கொள்முதல் 0.2% சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அதிக விலை, பணவீக்கம் காரணமாக பிரெஞ்சு மக்களிடையே குறைந்திருந்த ‘கொள்முதல் திறன்’ படிப்படையாக சீரடைந்து வருகிறது. சென்ற மாதம் 0.2% சதவீதத்தால் அதிகரிக்க, இவ்வருடத்தின் முதல் மூன்று காலாண்டுகளில் இது 0.8% சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக குளிர்பானங்கள், வெதுப்பக உற்பத்தி பொருட்கள், பாஸ்தா […]

இலங்கை

இலங்கை பணவீக்கத்தின் தற்போதைய நிலை!

  • October 31, 2023
  • 0 Comments

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள்தொகை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, 2023 செப்டம்பரில் 1.3 சதவீதமாக இருந்த பணவீக்கம் இம்மாதம் 1.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவுப் பணவீக்கம் மாறாமல் மைனஸ் 5.2 ஆக உள்ளது.

இலங்கை

யாழில் பேருந்து தடம்புரண்டு விபத்து

யாழ்ப்பாணம், கொடிகாமம் – பருத்தித்துறை இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்று இன்று காலை நெல்லியடிப் பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் என பொலிஸாரின் முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்தின்போது பேருந்தில் குறைந்தளவான பயணிகள் பயணித்துள்ளனர். கொடிகாமம் – பருத்தித்துறை பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை நெல்லியடி முள்ளிப் பகுதியில் குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது. விபத்து இடம்பெற்ற நிலையில் அப்பகுதியில் கூடிய பொதுமக்கள் […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

பொன்னியின் செல்வன் வானதியா இது? ஆளை மயக்கும் போட்டோஷூட்..

  • October 31, 2023
  • 0 Comments

நடிகை சோபிதா துலிபாலா. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் இவர் நடித்திருக்கிறார். வானதி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகை சோபிதா. இவர் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மனிஷ் மல்ஹோத்ரா டிசைன் செய்த சேலை அணிந்து சென்றார் சோபிதா துலிபாலா. மாடலிங் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். ​இவரின் வானதி கதாபாத்திரத்திற்கு ஏராளமான வரவேற்பு கிடைத்தது. சோபிதா படங்களில் மட்டுமில்லாமல், வெப் சீரிஸ்களிலும் நடித்துவருகிறார். நடிகை சோபிதா பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடனங்களில் […]

இலங்கை

யாழில் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞன் கைது !

  • October 31, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – வடமராட்சியில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவத்தில் தொடர்ச்சியாக ஈடுபடும் நபரொருவர் கைது செய்யப்பட்டார். துன்னாலை குடவத்தைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (30) இரவு நெல்லியடிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். குறித்த நபரிடம் இருந்து ஐந்து தண்ணீர் மோட்டார்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. பல இடங்களில் தொடர் மோட்டார் திருட்டுக்கள் இடம்பெற்று வந்தன. இவை தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. போதைப்பொருளை நுகர்வதற்காகவே குறித்த […]

பொழுதுபோக்கு

வித்தியாசாகர் மகனுடன் காதலில் விழுந்த சிவாங்கி! – வைரலான வீடியோ

  • October 31, 2023
  • 0 Comments

இசையமைப்பாளர் வித்யாசாகர் மகனுடன் சிவாங்கி நெருக்கம் காட்டியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ’சூப்பர் சிங்கர்’, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சிவாங்கி. இந்தப் பிரபலத்தின் மூலம் சினிமாவிலும் நடிக்க களமிறங்கினார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்த சிவாங்கி தற்போது இசை ஆல்பத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் வித்யாசாகரின் மகனான […]

இலங்கை

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு: விளக்கம் கோரும் எதிர்க்கட்சி

அடுத்த மாத வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உறுதிமொழி தொடர்பில் சமகி ஜன பலவேகய சந்தேகம் வெளியிட்டுள்ளது. “ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்கள் மத்தியிலும் பல குழப்பங்கள் உள்ளன. சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி இல்லை என அமைச்சர் பந்துல குணவர்தன ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஜனாதிபதி எவ்வாறு சம்பளத்தை அதிகரிப்பார் என்பது எவருக்கும் ஆச்சரியமாக உள்ளது” என சமகி ஜன பலவேகய […]

விளையாட்டு

8வது முறையாகவும் பலோன் டி’ஓர் விருதை தன் வசமாக்கிய லயனல் மெஸ்ஸி

  • October 31, 2023
  • 0 Comments

கால்பந்து ஜாம்பவான் லயனல் மெஸ்ஸி பலோன் டி’ஓர் விருதை எட்டாவது முறையாக பெற்று அசத்தியுள்ளார். கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி ‘ஓர் விருதை ஃபிஃபா ஆண்டுதோறும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வழங்கி வருகிறது. இந்த விருதானது 1956ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இவ்விருதினை அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஏற்கெனவே 7 முறை பெற்றிருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருது 30 ஆண்கள், 30 பெண்கள் என 60 வீரர், […]

ஆசியா

ஜப்பானில் மருத்துவமனையொன்றில் துப்பாக்கிச்சூடு!

  • October 31, 2023
  • 0 Comments

ஜப்பானில் உள்ள மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இன்று (31.10) நடந்துள்ளது. மத்திய ஜப்பானில் உள்ள டோடா நகரில் உள்ள மருத்துவமனையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது,  இதில் இருவர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 40 அல்லது 50 வயதுடைய சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், நகருக்கு அருகில் உள்ள வாராபியில் உள்ள தபால் நிலையத்தில் ஒருவர் பிணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து […]