இலங்கை

அரச நிறுவனங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

  • April 28, 2023
  • 0 Comments

இந்த வருடத்தில் 52 அரச நிறுவனங்களின் மொத்த இழப்பு 1,100 பில்லியன் ரூபாவாக உயரும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் மற்றும் இலக்குகளை விரைவாக பூர்த்தி செய்ய வேண்டிய தேவை இருப்பதாக குறிப்பிட்டார். இவ்வருடத்தின் முதல் 3 மாதங்களில் வெளிநாட்டுப் பணம் பெறுவது 80 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.அதன்படி இறக்குமதிச் செலவும் 37 வீதத்தால் […]

செய்தி தமிழ்நாடு

கோவையை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பு

  • April 28, 2023
  • 0 Comments

ஒரு நாட்டில் ஒரு குழுவினருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கும் ஐரோப்பா கண்டத்தின் மொனாக்கோ நாட்டில் நடக்கும் சர்வதேச எரிசக்தி படகு போட்டிக்கு கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். உலகம் முழுவதும் அதிகப்படியான ஏற்றுமதி, இறக்குமதி போன்ற வர்த்தகம் என்பது கப்பலில் நடந்து வருகிறது.குறிப்பாக பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருளில் கப்பல் இயங்குவதால் கடல் வளத்தில் அதிகமாக பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பை தடுக்கும் பொருட்டு உலகம் முழுவதும் இருக்கும் பொறியியல் கல்லூரி மாணவர்களை […]

வட அமெரிக்கா

கனடாவின் வான்கூவர் பகுதியில் வாகனத் தரிப்பிடத்தில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்!

  • April 28, 2023
  • 0 Comments

கனடாவில் பிறந்த சிசு ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கனடாவின் வான்கூவாரின் விக்டோரியா பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. வாகன தரிப்பிடம் ஒன்றில் பிறந்த சிசுவொன்று இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.பிளான்ட் ஷார்ட் சென்டர் ஷாப்பிங் பிளாசா பகுதியின் வாகனத் தரிப்பிடத்தில் இரவு இந்த சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.சடலமாக சிசு அந்தப் பகுதியில் பிறந்திருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலும் […]

ஐரோப்பா

நேற்றிரவு உக்ரைன் மீது ரஷ்யா வான் வழித் தாக்குதல் 9 உக்ரேனியர்கள் பலி

  • April 28, 2023
  • 0 Comments

உக்ரேனில் நேற்றிரவு ரஷ்ய படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தபட்சம் 9 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் கியேவ் உட்பட பல இடங்கள் மீது நேற்றிரவு ரஷ்யா வான் வழித் தாக்குதல்களை நட்ததியது. உமான் நகர் மீது ஏவப்பட்ட ஏவுகணைகள், குடியிருப்புக் கட்டடங்களைத் தாக்கியுள்ளன.இதனால் 7 பேர் காயமடைந்ததுடன் மேலும் பலர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டினிப்ரோ நகரம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பெண்ணொருவரும் அவரின் 3 வயது மகளும் […]

ஆப்பிரிக்கா

உள்நாட்டு போரால் தலைநகர் கார்டூமில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு!

  • April 28, 2023
  • 0 Comments

உள்நாட்டு மோதலால் சூடான் தலைநகர் கார்டூமில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்நாட்டில் அதிகாரத்தை கைப்பற்ற ராணுவத்திற்கும் துணை ராணுவப்படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், கார்டூம் நகரமே போர்க்களமாக மாறியது. இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பல பல்பொருள் அங்காடிகள் மூடப்பட்டுள்ள நிலையில், குறைந்தளவே உணவு பொருட்கள் கிடைப்பாதால், வரும் நாட்களில் பஞ்சம் ஏற்படுமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.

செய்தி தமிழ்நாடு

50 வயது கடந்த காவலர்களுடன் மாநகர காவல் ஆணையாளர் கலந்துரையாடல்

  • April 28, 2023
  • 0 Comments

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் 50 வயது கடந்த காவலர்களுடன் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்துரையாடினார். இதில் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள், போக்குவரத்து காவலர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த கலந்துரையாடலில் காவலர்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் காவல் ஆணையாளர் கேட்டறிந்தார். அப்போது பலரும் தங்களுக்கு 50 வயதிற்கு மேல் ஆகி விட்டதால் நீண்ட தூரம் வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் ஏற்படுவதாகவும் மருத்துவ பிரச்சனைகள் இருப்பதாகவும் தெரிவித்தனர். எனவே […]

செய்தி தமிழ்நாடு

இ வேஸ்ட் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் 5 பொருட்கள் விரைவில் பார்வைக்கு

  • April 28, 2023
  • 0 Comments

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தி்ன் கீழ் கோவையில் உள்ள குளங்கள் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் ஆகியவை தற்போது பொதுமக்கள் அதிகபட்ச பொழுதுபோக்கு இடமாக மாறி உள்ளது. இந்நிலையில் அதனை மேலும் மேம்படுத்தும் வகையிலும் அழகு சேர்க்கும் வகையிலும் எலக்ட்ரானிக் கழிவுகளை கொண்டு காட்சி பொருட்கள் வைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் தற்போது முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. உக்கடம் பெரியகுளம் குளக்கரையில் எலக்டிரானிக் கழிவு என்று அழைக்கப்படும் இ வேஸ்ட் கொண்டு 5 பொம்மை பொருட்கள் […]

வட அமெரிக்கா

ஆடையின்றி 40 பேர் கலந்து கொண்ட நிர்வாண இரவு உணவு விருந்து!

  • April 28, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் நியூயார்க்கில் உடை ஏதுமில்லாமல், 40 பேர் நிர்வாண இரவு உணவு விருந்தில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இரவு உணவு விருந்தை நாம் எப்படியெல்லாமோ கொண்டாடியிருக்கிறோம். மது, இசை, ஆட்டபாட்டமென தான் பொதுவாக இரவு உணவு விருந்து இருக்கும்.ஆனால் அமெரிக்காவின் நியூயார்க்கில் வித்தியாசமான முறையில் இரவு உணவு விருந்தை கொண்டாடியுள்ளனர். உணவும் மூச்சு பயிற்சியும் கலந்த அனுபவத்தை தர ஒரு குழுவினால் துவங்கப்பட்ட இந்த திட்டமானது, கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் அபூர்வமான அனுபவத்தை தரும் ஒன்றாக […]

இலங்கை

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட விசேட வாகனங்ள் !

  • April 28, 2023
  • 0 Comments

கடற்கரையோரங்களை அண்டியதாக இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு ஆட்கடத்தல்களை தடுப்பதற்காக ஐடியல் மோட்டார் நிறுவனத்தினால் உள்நாட்டில் 03 விசேட வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த விசேட வாகனங்கள் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன. கடலோர மற்றும் குளம் சார்ந்த பகுதிகள் மற்றும் எந்த கரடுமுரடான நிலப்பரப்பிலும் கடற்படை நடவடிக்கைகளுக்கு இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள், கொழும்பு மற்றும் மன்னார் கடற்பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் […]

ஐரோப்பா

பிரிட்டனில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள வீட்டு வாடகை

  • April 28, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் வரலாறு காணாத அளவுக்கு வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ளன. லண்டனில் வசிக்கும் மக்கள் முதன்முறையாக மாதம் ஒன்றிற்கு 2,500 பவுண்டுகளுக்கும் அதிகமாக வாடகை செலுத்தியுள்ளார்கள். இந்த ஆண்டின் முதல் காலாண்டில் லண்டனில் வசிக்கும் மக்கள் முதன்முறையாக மாதம் ஒன்றிற்கு 2,500 பவுண்டுகளுக்கும் அதிகமாக வாடகை செலுத்தியுள்ள நிலையில், மற்ற நகரங்களில் வசிப்பவர்களோ வரலாறு காணாத வகையில், மாதம் ஒன்றிற்கு 1,900 பவுண்டுகள் வாடகை செலுத்தியுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. Rightmove என்னும் இணையதளம் மேற்கொண்ட ஆய்வில் […]