ஆசியா செய்தி

இஸ்ரேல் மேற்குக் கரையில் நடந்த தாக்குதலில் 16 வயது இளைஞன் மரணம்

  • April 28, 2023
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் நடந்த மோதலின் போது இஸ்ரேலியப் படைகள் பாலஸ்தீன இளைஞனைக் கொன்றதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெத்லஹேம் நகருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் இஸ்ரேலியப் படைகளுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே நடந்த மோதலின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பாலஸ்தீனிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாலஸ்தீன சாட்சிகள் செய்தி நிறுவனத்திடம், பெத்லஹேமுக்கு அருகில் ஒரு இளம் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய துருப்புக்கள் மீது கற்களை வீசினர், அவர்கள் கண்ணீர்ப்புகை மற்றும் துப்பாக்கிச் சூடு மூலம் பதிலளித்தனர். பாலஸ்தீன சுகாதார […]

இந்தியா விளையாட்டு

258 ஓட்ட வெற்றிலைக்கை நிர்ணயித்த லக்னோ அணி

  • April 28, 2023
  • 0 Comments

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மொகாலியில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி, ஆரம்பம் முதலே பஞ்சாப் பந்துவீச்சை அடித்து நொறுக்கி ரன் குவித்தது. கேப்டன் கே.எல்.ராகுல் 11 ரன்னில் ஆட்டமிழந்தபோதிலும், மற்ற வீரர்கள் பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். 20 பந்துகளில் மிக விரைவாக அரை […]

செய்தி தமிழ்நாடு

தனது கணவர் மீது கவுன்சிலர் நூர்ஜகான் அவதூறு பரப்புவதாக குற்றம்

  • April 28, 2023
  • 0 Comments

முன்னாள் துணை மேயர் விசா பாண்டியன் அவர்களின் மனைவியும் மத்திய மண்டல தலைவருமான பாண்டிச்செல்வி அவர்கள் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவுது எனது கணவர் மீது அவதூறு பரப்பி வருகின்றனர் எனது கணவர் துணை மேயராக இருந்தவர் எனவே அவரது ஆலோசனைகளை நான் கேட்டு பெற்றுக் கொள்வதாகவும் கூறினார். இது போன்ற நிகழ்வு நடந்ததாக தனக்குத் தெரியாது என்றும் தான் அறையினுள் இருந்ததால் இது பற்றி தெரியாது என்றும் இது குறித்த சிசிடிவி […]

செய்தி தமிழ்நாடு

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை

  • April 28, 2023
  • 0 Comments

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் பூத் கமிட்டிகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் கோவை அவினாசி சாலை சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கோவை மற்றும் சேலம் மண்டல நிர்வாகிகள் பங்கேற்றனர்.‌ நாடாளுமன்ற தேர்தலுக்குள் பூத் கமிட்டிகளை பலப்படுத்தி கட்சியின் கட்டமைப்பை வலுவாக்க வேண்டும் என […]

வட அமெரிக்கா

இளைஞர் தொடர்பில் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ள கனடா பொலிஸார்

  • April 28, 2023
  • 0 Comments

கனடாவின் மாண்ட்ரீல் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரின் சடலம் ரொறன்ரோவில் மீட்கப்பட்ட நிலையில், பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ரொறன்ரோவில் ஞாயிறன்று பகல் வழிபோக்கர் ஒருவரால் 18 வயது ஜாக்ரி ராம்நாத் என்பவரின் சடலம் அடையாளம் காணப்பட்டது. இந்த நிலையில் உள்ளூர் பொலிஸார் தெரிவிக்கையில், ஜாக்ரி ராம்நாத் என்ற இலைஞரை மர்ம நபர்கள் இலக்கு வைத்து கொன்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், 16 வயது ஏசாயா லியோபோல்ட் ரோச் என்ற சிறுவனின் கொலையில் […]

இலங்கை

அனுராதபுர அரச வைத்தியசாலைக்குள் நடந்த கொடூர சம்பவம்!

  • April 28, 2023
  • 0 Comments

அனுராபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர், கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட பிரச்சினை காரணமாக தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த இந்த இளைஞன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளது. இன்று அதிகாலை இளைஞன் சிகிச்சை பெற்று வந்த விடுதிக்குள் வந்த ஒருவர் இளைஞனை கூரிய ஆயுதத்தினால் குத்தி […]

இந்தியா

தேர்வு தோல்வியால் 9 மாணவர்கள் எடுத்த விபரீத முடிவு..!

  • April 28, 2023
  • 0 Comments

ஆந்திராவில் 9 மாணவர்கள் தேர்வில் தோல்வியுற்றதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்த தேர்வில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதினார்கள். இந்நிலையில், கடந்த புதன்கிழமை 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. முதலாம் ஆண்டு தேர்ச்சி சதவீதம் 61 ஆகவும், 2ம் ஆண்டு தேர்ச்சி சதவீதம் 72 ஆகவும் இருந்தது. இந்தத் தேர்வில் தோல்வி அடைந்த, தருண் (17) என்ற […]

செய்தி தமிழ்நாடு

மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 2 பேர் உயிரிழப்பு

  • April 28, 2023
  • 0 Comments

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆதினமிளகி அய்யனார் முத்துமணிஅய்யா கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 252 காளைகளும் 70 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இந்த மஞ்சுவிரட்டு போட்டியினை கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் துவக்கி வைத்தார். காளைகள் அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு ஷேர், பீரோ, அண்டா , சைக்கிள், போன்ற பரிசுகளும் அமைச்சர் சார்பில் வழங்கப்பட்டது. இதில் கட்டுமாடுகளாக ஆங்காங்கே 300க்கும் மேற்பட்ட காளைகள் வயல்வெளிகளில் அவிழ்த்து […]

செய்தி தமிழ்நாடு

கூட்டு குடிநீர் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்

  • April 28, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட கோவளம் ஊராட்சியில் நீண்ட நாட்களாக குடிநீர் பற்றாக்குறை இருந்து வருகிறது, அதனைப் போக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து கேளம்பாக்கம் அடுத்த தையூர் ஊராட்சியில் உள்ள ஏரியிலிருந்து மத்திய அரசின் திட்டமான ஜல்ஜீவன் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கோவளம் ஊராட்சி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என ஆணை பிறப்பித்தது அதனைத் தொடர்ந்து தையூர் ஏரியில் கிணறு தோண்டும் பணி சில நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டது […]

இலங்கை

நுவரெலியாவில் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 26 மாணவர்கள் !

  • April 28, 2023
  • 0 Comments

நானுஓயா காவல்துறை பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிளாசோ பிரதேச பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 26 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த பாடசாலையில் தொடர்ந்து பகலுணவு வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று வழங்கப்பட்ட உணவை அருந்திய வேளை மாணவர்களுக்கு மயக்கநிலை, வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டன. மேலும் உணவருந்தியவர்களில் சுமார் 26 க்கும் அதிகமான மாணவர்கள் வயிற்று உபாதைக்கு உள்ளாகியதனைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக […]