மெக்சிகோவில் கடத்தப்பட்ட 16 பொலீசார் மீட்பு
மெக்சிகோவில் கடத்தப்பட்ட 16 பொலீஸ் அதிகாரிகளும் மீட்கப்பட்டு அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மெக்சிகோவின் சியாபாஸ் மாகாணம் ஓகோசோகோல்டா பகுதியில் இருந்து டக்ஸ்ட்லா குட்ரெஸ் நகருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் பொலீஸ் அதிகாரிகள் வாகனத்தில் சென்றனர்.
அப்போது ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் சிலர் அந்த வாகனத்தை வழி மறித்தனர். பின்னர் துப்பாக்கி முனையில் வாகனத்தில் இருந்த 16 பொலீஸ் அதிகாரிகளையும் சிறை பிடித்து சென்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கடத்தப்பட்ட பொலீஸ் அதிகாரிகளை மீட்கும் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலீஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் சியாபாசின் நெடுஞ்சாலை அருகே 16 பொலீஸ் அதிகாரிகளும் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.