போரில் கொல்லப்பட்ட 1000 உக்ரைன் வீரர்களின் உடல்களை கையளிக்கும் ரஷ்யா!

ரஷ்யாவால் கொல்லப்பட்ட 1000 உக்ரைன் போர் வீரர்களின் உடல்கள் அந்நாட்டிடம் கையளிக்கப்படவுள்ளதாக போர்க் கைதிகளை நடத்துவதற்கான ஒருங்கிணைப்புத் தலைமையகம் அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர் பிப்ரவரி 2022 இல் தொடங்கியதிலிருந்து, வீரர்களின் உடல்களை திருப்பி அனுப்புவதும் கைதிகளை பரிமாறிக்கொள்வதும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ரஷ்யாவின் படையெடுப்பிலிருந்து இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இருப்பினும், கியேவ் அல்லது மாஸ்கோ இரண்டுமே தங்கள் சொந்த உயிரிழப்புகள் குறித்த தரவுகளை தொடர்ந்து வெளியிடுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)