Site icon Tamil News

பிரித்தானியாவில் இலங்கை தமிழருக்கு நேர்ந்த பரிதாப நிலைமை!

பிரித்தானியா Midhurst பகுதியில் இலங்கை தமிழர் நடத்தி செல்லும் கடையின்உரிமம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

கடையில் மூன்று சட்டவிரோத வேலையாட்களை குடியேற்ற அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Holmbush Way பகுதியில் Holmbush கடை நடத்தும் நவரத்தினம் சதானந்தன் என்பவரிடம் இருந்தே உரிமம் பறிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அலுவலகத்தில் அமலாக்கக் குழுவிற்கு கிடைத்த ஒரு தகவலுக்கமைய, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குறித்த கடைக்கு பொலிஸார் மற்றும் அதிகாரிகளை அழைத்துச் சென்ற போது அங்கு மூன்று தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் 2007 ஆம் ஆண்டு லொறியின் பின்புறத்தில் பிரித்தானியாவுக்கு வந்துள்ளார். மற்றவர்கள் பல வருடங்கள் வருகையாளர் விசாவில் தங்கியிருந்தனர்.

குறித்த மூவரும் தஞ்சம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்துறை அலுவலகத்தால் சிவில் அபராத அறிவிப்பு வெளியிடப்பட்டது, அதில் சதானந்தன் தொழிலாளர்களுக்காக தலா 20,000 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு சதானந்தன் மத மற்றும் கலாச்சார விடயங்களில் கலந்துகொள்வதற்காக சுமார் ஒரு மாத காலம் இலங்கைக்கு சென்றிருந்தபோது தொழிலாளி ஒருவர் மட்டுமே கடையில் இருந்ததாக அவர் விசாரணையின் போதும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் திரும்பி வருவதற்குள் மற்ற இருவரும் உள்ளே நுழைந்துள்ளதாகவும், அவர்கள் இருவருக்கும் எந்தவிதமான ஊதிய வேலையும் வழங்கவில்லை எனவும் மறுத்துள்ளார். ஆனால் முதல் தொழிலாளிக்கு வாரத்திற்கு 250 பவுண்ட் பணம் கொடுத்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் தனது தாயாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், நிறுவனத்தின் வங்கியில் சிக்கல்கள் இருப்பதாகவும் விசாரணையின் போது சதானந்தன் கூறிப்பிட்டுள்ளார்.

தன்னால் ஏற்பட்ட தவறிற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறிய சதானந்தன் தனது கடையின் உரிமத்தை மீள வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும் அவரது காரணங்களை ஏற்றுக் கொள்ளாத அதிகாரிகள் கடையின் உரிமத்தை இரத்து செய்துள்ளனர்.

 

Exit mobile version