Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள்

ஆஸ்திரேலியாவில் நான்கு பேரில் ஒருவர் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் துரிதமாக அதிகரித்துள்ளமையினால் தாம் கூடுதல் செலவினங்களைச் சுமக்க வேண்டியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வாரத்திற்கான அத்தியாவசியப் பொருட்களுக்கு 150 முதல் 200 டொலர் வரை செலவழிக்க வேண்டியிருந்ததாகவும், தற்போது அது 400 முதல் 500 டொலர் வரை அதிகரித்துள்ளதாகவும் நுகர்வோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டால், இந்த நிலை இன்னும் மோசமாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுக்கப்பட்ட 76 சதவீத நுகர்வோர் பொழுதுபோக்கு மற்றும் உணவு உண்பது போன்றவற்றில் செலவழிப்பதைக் குறைத்துள்ளனர்.

மேலும், 23 சதவீத மக்கள் தனியார் வாகனங்களை பயன்படுத்தாமல் பொது போக்குவரத்தை பயன்படுத்த ஆசைப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

Exit mobile version