பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு – இருவர் பலி
பிரான்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
Maurepas (Rennes) நகரில் இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் இருவரே கொல்லப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
(Visited 1 times, 1 visits today)