செய்தி தமிழ்நாடு

நன்மை நிறைந்த நாள்

குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மதிப்புகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்.

அஸ்வினி : புரிதல் உண்டாகும்.

பரணி : மாற்றங்கள் ஏற்படும்.

கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

ரிஷபம் ராசி:

தனவரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சில விஷயங்களில் அனுசரித்து செல்வதன் மூலம் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். விரயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பாச நிறம்.

கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.

ரோகிணி : முடிவுகள் கிடைக்கும்.

மிருகசீரிஷம் : குழப்பம் நீங்கும்.

மிதுனம் -ராசி:

உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை குறைத்து கொள்ளவும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். ஆதரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

மிருகசீரிஷம் : வாதங்களை தவிர்க்கவும்.

திருவாதிரை : மந்தமான நாள்.

புனர்பூசம் : பயணங்கள் கைகூடும்.

கடகம் -ராசி:

ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்ளவும். எதிர்பாராத பயணங்கள் கைகூடும். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். சகோதரர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நயமான பேச்சுக்கள் நன்மையை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.

புனர்பூசம் : பயணங்கள் கைகூடும்.

பூசம் : அனுசரித்து செல்லவும்.

ஆயில்யம் : பொறுப்புகள் குறையும்.

சிம்மம் -ராசி:

பேச்சுக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். பெற்றோர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொது காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். பிரபலமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். வியாபார பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். வரவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்.

மகம் : ஆதாயம் ஏற்படும்.

பூரம் : தேடல் உண்டாகும்.

உத்திரம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

கன்னி -ராசி:

நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் உற்சாகத்துடன் கலந்து கொள்வீர்கள். வீண் செலவுகளால் மனதில் சஞ்சலங்கள் ஏற்படும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். உத்தியோக பணிகளில் உயர் பொறுப்புகள் கிடைக்கும். வீடு, வாகனங்களை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். பணிபுரியும் இடத்தில் மதிப்புகள் மேம்படும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்.

உத்திரம் : ஆதரவான நாள்.

அஸ்தம் : மேன்மை உண்டாகும்.

சித்திரை : மதிப்புகள் மேம்படும்.

துலாம் -ராசி:

மனதில் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்லவும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு புதிய முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் மாற்றமான வியூகங்களை கையாளுவீர்கள். மாமன்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்.

சித்திரை : அனுசரித்து செல்லவும்.

சுவாதி : மாற்றமான நாள்.

விசாகம் : ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்- ராசி:

எதிலும் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோக பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். மற்றவர்கள் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்லவும். வாழ்க்கை துணைவரின் வழியில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். தடைகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு.

விசாகம் : பொறுமையுடன் செயல்படவும்.

அனுஷம் : பிரச்சனைகள் நீங்கும்.

கேட்டை : அலைச்சல்கள் ஏற்படும்.

தனுசு -ராசி:

சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாழ்க்கை துணையின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்.

மூலம் : ஒத்துழைப்பான நாள்.

பூராடம் : எதிர்ப்புகள் விலகும்.

உத்திராடம் : வரவுகள் உண்டாகும்.

மகரம் -ராசி:

மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் நன்மையை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை.

உத்திராடம் : எண்ணங்கள் ஈடேறும்.

திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

அவிட்டம் : அனுபவம் உண்டாகும்.

கும்பம் -ராசி.

புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். சகோதரர்களால் காரிய அனுகூலம் ஏற்படும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். நெருக்கமானவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

அவிட்டம் : ஆதாயம் உண்டாகும்.

சதயம் : விருப்பம் நிறைவேறும்.

பூரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.

மீனம் -ராசி:

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மன வருத்தங்கள் நீங்கும். உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். பிரச்சனைகளுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுகமான திறமைகளால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். இன்னல்கள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை.

பூரட்டாதி : வருத்தங்கள் நீங்கும்.

உத்திரட்டாதி : ஆதாயம் கிடைக்கும்.

ரேவதி : முன்னேற்றமான நாள்.

(Visited 2 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content