கேரளாவில் இந்திய கடலோர பாதுகாப்பு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயமடைந்தனர்
இந்திய கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை தென்னிந்தியாவின் கேரளாவில் உள்ள விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலகுரக ஹெலிகாப்டர் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் பறந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட கோளாறை அடுத்தே இந்த விபத்து ஏற்பட்டுள்ளகித்து.
ஹெலிகாப்டரின் சுழற்சிக் கட்டுப்பாடுகள் புறப்பட்ட உடனேயே இயங்காத நிலையில், விமானி விமானத்தை பிரதான ஓடுபாதையில் இருந்து விலக்கி, தரையிறங்கியுள்ளார், இதன்போது விபத்து நிகழ்ந்துள்ளது.
எனினும் விமானிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை, ஆனால் காயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 2 times, 1 visits today)