காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர் மரணம்
காலிமுகத்திடல் போராட்டத்தில் முன்னணி செயற்பாட்டாளராக பணியாற்றிய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவரது மரணத்திற்கான காரணம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
புத்தி பிரபோத கருணாரத்ன என்ற இந்த இளைஞன் லண்டன் பல்கலைக்கழகத்தின் சட்டப் பட்டதாரி ஆவார்.
நாளிதழ் ஊடகவியலாளர் மற்றும் வலைப்பதிவு எழுத்தாளரான இவர் காலிமுகத்திடல் போராட்டப் பிரதேசத்தில் முதலாவது கூடாரத்தை நிர்மாணித்தவர் எனவும் போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
அவரின் சடலம் இன்று (19) மஹரகம கொதிகமுவவில் தகனம் செய்யப்பட்டது. மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(Visited 4 times, 1 visits today)