கத்தி முனையில் பல ஆண்களிடம் கைவரிசயை காட்டிய 18 வயது யுவதி!
கனடாவின் மிஸ்ஸிசாகுவாவில் கத்தி முனையில் ஆண்களிடம் கொள்ளையிட்ட 18 வயது யுவதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெஸ்மின் ஹோங் என்ற 18 வயது யுவதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இணைய வழி டேடிங் செயலி ஒன்றின் மூலம் அறிமுகமான ஆண்களிடம் குறித்த யுவதி இவ்வாறு கொள்ளையிட்டுள்ளார்.
இணைய வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட ஆண்களை மால்டன் பகுதிக்கு அழைத்து வந்து அவர்களிடம் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வேறும் சிலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
(Visited 2 times, 1 visits today)