Site icon Tamil News

எளிமையாக உடை அணியுமாறு இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

இலங்கையில் இந்த நாட்களில் நிலவும் அதிகப்படியான வெயில் காரணமாக நீரிழப்பு அதிகரித்துள்ளது.

இதனால் மருத்துவர்கள் எளிமையான ஆடைகளை அணிய அறிவுறுத்தியுள்ளனர்.

BIG FOCUS திட்டத்தில் இணைந்துகொண்ட கொழும்பு Lady Ridgway மருத்துவமனையின் குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா, வெளிநாடுகளில் இருக்கும் அதே உடை கலாச்சாரத்தை இலங்கைக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றார்.

நாட்டில் தற்போது அதிக வெப்பநிலை நிலவுகிறது. ஆகவே குறைந்த பட்ச சூரிய ஒளியை உறிஞ்சும் வகையில் ஆடை அணிந்து வெளியே செல்ல வேண்டும்.

இங்கிலாந்து போன்ற நாடுகளில் கோடையில் அப்படித்தான் செய்கிறார்கள். நாங்களும் நம் குழந்தைகளுக்கு எளிய உடைகளை அணியச் சொல்கிறோம்.

டை அணிபவர்கள் டை அணியாமல் எளிய உடை அணியச் சொல்கிறோம் . பாடசாலைக்கு எளிமையான உடை அணியா வேண்டும்.

சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் எளிமையான உடை மற்றும் தொப்பி அணியலாம்.

மேலும் நீரிழப்பை ஈடுகட்ட குழந்தையின் எடைக்கு ஏற்றவாறு தண்ணீர் கொடுக்க வேண்டும். அதேவேளை அதிக தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் பருமன் குறையும் என தற்போது நிலவும் கருத்தியல்களில் உண்மையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

 

Exit mobile version