Site icon Tamil News

ஊர் சார்பில் விவசாயிகள் மதுபானக்கடையை இடமாற்ற கோரி மனு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராஜபாளையம் பகுதி  விவசாயம் செழிக்கும்   பூமியாக திகழ்ந்து வருகின்றது

இங்கு விவசாயிகள் பிரதான தொழிலாக  பலவகையான பூ தோட்டங்களில் விளைவிக்கின்ற பூக்களை வெளிமாநிலங்ளுக்கு ஏற்றுமதிக்கு பெயர் போனதாக விளங்கி வருகின்றது அதுமட்டுமின்றி வாழை நெல் கரும்பு உள்ளிட்டவைகளை விளைவிக்கின்ரனர்.

இந்த விவசாய நில பகுதிகளுக்கு இடையை மது பான கடை இயங்கி வருகின்றது இங்கு பத்துக்கும் மேற்ப்பட்ட சிறிய சிறிய கிராமத்தில் இருந்து மது பிரியர்கள் படை எடுத்து வந்து செல்கின்றனர்.

இதனால் இந்த பகுதியில் உள்ள  சாலையில் பதினோரு மணி முதல் இரவு 11 மணி வரை சாலையில் மது பிரியர்கள் குடித்துவிட்டு சாலையில் படுத்துக் கொள்வதும் விவசாய நிலத்திற்கு செல்லும் கூலி ஆட்களை தொந்தரவுகள் செய்வதும் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளை கேலி கிண்டல்  செய்வதும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை விளைவிப்பது இது வாடிக்கையாக வருகின்றது என்று அப்பகுதி குற்றசாட்டு முன்வைக்கின்றனர்.

இதைக் குறித்து ஊர் பொதுமக்கள் சார்பில் டாஸ்மார்க் துறையை சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கு பலமுறை டாஸ்மார்க் கடை இடமாற்ற கோரி கோரிக்க அளித்தோம் ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆத்திரம் அடைந்த   ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து எங்களுக்கு பாதகமாக விளைவிக்கக் கூடிய எங்கள் பகுதியில் உள்ள மதுபான கடையை இடமாற்ற கோரி ஊர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

மாவட்ட ஆட்சியர் மனுவை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version