இறுதிச் சடங்கில் நவல்னியின் பெயரைக் கோஷமிட்ட ஆயிரக்கணக்கான மக்கள்!
மறைந்த ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதியின் இறுதிச் சடங்கு மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் வாழ்ந்த மேரினோ மாவட்டத்தில் உள்ள குவென்ச் மை சோரோஸ் தேவாலயத்திற்கு அவரது சவப்பெட்டியை ஏற்றிச் செல்லும் வாகனம் வெள்ளிக்கிழமை வந்தடைந்தது.
நவல்னியின் சவப்பெட்டி தேவாலயத்திற்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டபோது “நவல்னி” என்று மக்கள் உரத்த கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தூதர்கள் உட்பட மேற்கத்திய இராஜதந்திரிகளும் இறுதிச் சடங்கிற்கு வந்துள்ளனர்.
“நாங்கள் உங்களை மறக்க மாட்டோம்!” மற்றும் “எங்களை மன்னியுங்கள்!” சவப்பெட்டியை அடக்கம் செய்ய வந்தபோது சில மக்கள் கூச்சலிட்டனர்.
அலெக்ஸி நவல்னி யூடியூப் சேனல் லைவ் ஸ்ட்ரீம் மூலம்அவரது இறுதிச்சடங்கு ஒளிபரப்படுகிறது.