Site icon Tamil News

69 வயதில் மூன்றாவது திருமணம் செய்யவுள்ள WWE மல்யுத்த வீரர்

அமெரிக்காவின் பிரபல மல்யுத்த போட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘WWF’வில் 1980-90 களில் நட்சத்திர வீரராகப் திகழ்ந்தவர் ஹல்க் ஹோகன் (Hulk Hogan)

ஐந்து முறை WWF சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ள இவர் 1983-ல் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய லிண்டா கிளாரிட்ஜை திருமணம் செய்துகொண்டார்.

26 ஆண்டுகள் ஒன்றாக இருந்த இவர்களது திருமண உறவில் சிறுசிறு பிரச்னைகள் எழ 2009-ல் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

பின்னர் 2010ல் ஹோகன், பிரபல மேக்கப் ஆர்டிஸ்டான ஜெனிபர் மெக்டேனியலை காதலித்து திருமணம் செய்துகொண்டார்

10 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் 2021-ல் விவாகரத்துப் பெற்றனர்.

பின்னர், 69 வயதாகும் ஹல்க் ஹோகன், யோகா பயிற்சியாளராக இருக்கும் ஸ்கை டெய்லி (45) என்பவரை காதலிக்க தொடங்கினார்.

டெய்லிக்கும், ஹல்க் ஹோகனுக்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.

ஹல்க் ஹோகனுக்கு முதல் மனைவி மூலம் இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version