ஆன்லைன் முறைகள் மூலம் பெண்கள், குழந்தைகள் பாதிப்பு!! அமைச்சர் வெளியிட்ட தகவல்
ஆன்லைன் முறைகள் மூலம் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட மக்களிடம் இருந்து வரும் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே ஆன்லைன் முறைகளின் பாதுகாப்பு குறித்த மசோதாவை முன்வைக்க முக்கிய காரணம் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் கூறுகிறார்.
பொது பாதுகாப்பு அமைச்சில் சிவில் அமைப்புக்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்த சட்டமூலத்தை கொண்டு வருவதில் பங்குதாரர்களுடன் விரிவான கலந்துரையாடல் எதுவும் மேற்கொள்ளப்படாதது பிரச்சினையாக உள்ளதாக இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட சிவில் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அங்கு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் கூறுகையில், ஆன்லைன் முறைகள் மூலம் பாதிக்கப்படும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட மக்களிடம் இருந்து வரும் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அவர்கள் மீதான அழுத்தத்தை குறைப்பதே இந்த மசோதாவின் நோக்கமாகும்.
இந்த கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்து ஆசிய ஒத்துழைப்பு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், தூதரகங்கள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.