கிரீஸ் நாட்டை உலுக்கும் காட்டுத்தீ – வேகமாக பரவுவதால் மக்கள் வெளியேற்றம்
கிரீஸ் தலைநகர் ஏதன்ஸ் அருகே காட்டுத்தீ வேகமாக பரவியதில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.
இந்த ஆண்டு நாடு சந்தித்த ஆக மோசமான காட்டுத்தீ இதுவாகும். ஏதன்ஸின் வடக்கே நேற்று முன்தினம் காட்டுத்தீ தொடங்கியது.
தீயைக் கட்டுக்குள் கொண்டுவர 700க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு இயந்திரங்கள், நீர்க்குண்டுகளை வீசும் விமானங்கள் முதலியவை பயன்படுத்தப்பட்டன.
25 மீட்டர் உயரத்துக்குத் தீ கொழுந்துவிட்டு எரிவதால் அதனை அணைக்க வீரர்கள் போராடுகின்றனர்.
கிரீஸ் அதிகாரிகள் நிலைமையைச் சமாளிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை நாடியுள்ளனர்.
பல நாடுகள் உதவ முன்வந்துள்ளன. கோடைக்காலத்தில் கிரீஸ் காட்டுத்தீயால் பாதிக்கப்படுவது வழக்கமாகும். இப்போது பருவநிலை மாற்றம் அதீத வெப்பத்துக்கு இட்டுச்சென்றுள்ளது.