குழந்தைகளுடன் பெண் தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்த நபருக்கு ஏற்பட்ட நிலை
மினுவாங்கொடை யாகொடமுல்ல பிரதேசத்தில் நான்கு பெண் குழந்தைகளுடன் தாயொருவர் தங்கியிருந்த வீடொன்றிற்குள் நுழைந்த கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவரால் தாக்கப்பட்டு வீட்டில் பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவருடன் வந்த ஏனைய இருவரும் தப்பிச் சென்றுள்ளதாகவும் மினுவாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (11) அதிகாலை யாகொடமுல்ல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் இரண்டு மாடி வீட்டில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தது ஒபட பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சொத்துக்களை கொள்ளையடிக்கும் நோக்கில் இவர்கள் வந்தனரா அல்லது பெண்களை துஷ்பிரயோகம் செய்யும் நோக்கில் வந்தனரா என்பது குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.