மேற்கு நாடுகள் உலகப் பொருளாதாரத்தை அழித்துவிட்டதாக: ரஷ்யா குற்றச்சாட்டு
ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து மேற்கு நாடுகள் உலகப் பொருளாதாரத்தை அழித்துவிட்டதாக ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேற்கின் பசுமை மாற்றம் உலக எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தையில் நெருக்கடிகளைத் தூண்டிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவிற்கு பாடம் கற்பிப்பதற்காக உலகப் பொருளாதாரத்தை அழிக்க மேற்குலகம் விரும்புவதால், மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் நீண்ட காலத்திற்கு மறைந்துவிடாது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார்.
“ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் காரணமாக ஐரோப்பிய வணிகம் குறைந்தது 250 பில்லியன் யூரோக்களை இழந்தது. “ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் உலகப் பொருளாதாரத்தின் நெருக்கடி வளர்ச்சிகளை மோசமாக்கியது,” என்று அவர் குறிப்பிட்டார்.