பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!
பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் இருந்து சுகாதார அமைச்சை நோக்கி இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அரச மருத்துவ பீடங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரியும் புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிக்கும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தினை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை இந்த போராட்டம் காரணமாக தாமரைத் தடாக சந்திக்கு அருகில் தற்போது வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
(Visited 5 times, 1 visits today)