பிரான்ஸை உலுக்கிய வன்முறை – பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு
பிரான்ஸில் கலவரம் அடக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இதனால் வன்முறையாளர்கள் தங்களது எல்லையை மீறியுள்ளதாக கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் Nîmes (Gard) நகரில் இடம்பெற்றுள்ளது.
வன்முறையினை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரை நோக்கி துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.
9 மில்லி மீற்றர் அளவுடைய துப்பாக்கி சன்னம் அதிகாரி மீது பாய்ந்த நிலையில், அவரது குண்டு துளைக்காத ஆடையில் பட்டு தெறித்துள்ளது. அதிகாரி காப்பாற்றப்பட்ட போதும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அதேவேளை, வன்முறையாளர்கள் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டக்காரர்கள் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்வது எல்லை மீறிய செயல் என பொலிஸ் தொழிற்சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.