வட அமெரிக்கா

ஆதரவாளர்களைத் திரட்டும் அமெரிக்கத் துணை அதிபர் வேட்பாளர் டிம் வோல்ஸ்

அமெரிக்கத் துணை அதிபர் வேட்பாளர் டிம் வோல்ஸ், தாமும் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசும் வரும் நவம்பர் மாதத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டோனல்ட் ட்ரம்ப்பை வெற்றிகாண்பார்கள் என்று உறுதிகூறியிருக்கிறார்.

ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுடன் ஆகஸ்ட் 21ஆம் திகதி நடைபெற்ற அரசியல் ஊக்கப் பேரணியில் அவர் உரையாற்றினார்.

மினிசோட்டா ஆளுநரான அவர், அத்தகைய பெரிய அளவிலான உரையை இதுவரை நிகழ்த்தியதில்லை என்பதைக் குறிப்பிட்டார். இருப்பினும், உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் காற்பந்துப் பயிற்றுவிப்பாளராகத் தாம் பல ஊக்க உரைகளை ஆற்றியிருப்பதாக அவர் சொன்னார்.அதற்கு, அங்குத் திரண்டிருந்தவர்கள் “பயிற்றுவிப்பாளர், பயிற்றுவிப்பாளர், பயிற்றுவிப்பாளர்!” என்று முழக்கமிட்டனர்.

வோல்ஸ் தேசிய அரங்கிற்கு தமது சிறுநகரப் பண்புகளையும் வெளிப்படையான பேச்சையும் கொண்டுசேர்த்தார்.

சிகாகோவில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில், அரசியல்வாதிகளும் கலைஞர்களும் கலந்துகொண்டனர்.துணை அதிபர் வேட்பாளருக்கான தமது கட்சியின் நியமனத்தை வோல்ஸ், 60, ஏற்றுக்கொண்டார்.

Tim Walz and Bill Clinton headline the Democrats' third day, focusing on a  'fight for our freedoms' | WJHL | Tri-Cities News & Weather

பிள்ளைகள் பட்டினியில்லாமல், சுகாதாரப் பராமரிப்பும், வீடமைப்பும் மனித உரிமைகளாக இருக்கவேண்டிய ஓர் இடமாக அமெரிக்கா திகழவேண்டும் என்றார் அவர்.

மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்குப் போட்டியிடும் 78 வயது ட்ரம்ப்பால் வழிநடத்தப்படும் வெள்ளை மாளிகை, செல்வந்தர்களைத் தவிர வேறு யாருக்கும் சேவை அளிக்காது என்று வோல்ஸ் கூறினார்.இந்நிலையில்,ஹாரிஸ் (59), ஆகஸ்ட் 22ஆம் திகதி இரவு, கூட்டத்தில் உரையாற்றவிருக்கிறார்.

பிரபலக் கலைஞர் ஓப்ரா வின்ஃப்ரீ, முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுடன் சேர்ந்து ஹாரிசுக்குத் தமது ஆதரவைத் தெரிவித்தார்.வின்ஃப்ரீ மேடையேறியதும், பேராளர்கள் உடனடியாக நின்று ஆரவாரம் செய்தனர்.

அதிபர் ஜோ பைடன் வரும் நவம்பர் மாதத் தேர்தலிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, சென்ற ஜூலை மாதம் துணை அதிபர் ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.அவர் 15 நாள்களுக்கு முன்னர்தான் அதிகப் பிரபலம் இல்லாத வோல்ஸை தேசிய அளவிலான மேடையில் அறிமுகப்படுத்தினார்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content