Tamil News

பிரிட்டிஷ் அகாடமி விருதுக்கு இரு இந்திய எழுத்தாளர்கள் தேர்வு

உலகளாவிய கலாசாரத்துக்கு சிறந்த பங்களிக்கும் கதைகளுக்கு பிரிட்டிஷ் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி உலகின் எந்த நாடு, மொழியை சேர்ந்த படைப்புகளாக இருந்தாலும் அவை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு இங்கிலாந்தில் வெளியிடப்படும். பின்னர் அவற்றில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அதன் எழுத்தாளருக்கு சுமார் ரூ.25 கோடி பரிசாக வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் 2023ம் ஆண்டு பிரிட்டிஷ் அகாடமி விருதுக்கு 6 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதில் `கோர்டிங் இந்தியா’ என்ற கதைக்காக இங்கிலாந்தில் வசிக்கும் நந்தினி தாஸ், `தி லாங் டெத் ஆப் எம்பயர்’ கதை எழுதிய அமெரிக்காவில் உள்ள கிரிஸ் மஞ்சப்ரா என இரு இந்தியர்களது பெயரும் இடம்பெற்றுள்ளது.

2 Indian-origin authors shortlisted for British Academy Book Prize

அடுத்த மாதம் (அக்டோபர்) 31ம் திகதி லண்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் இதன் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். மேலும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் சுமார் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பிரிட்டிஷ் அகாடமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version