இலங்கையில் தொழிற்சங்க நடவடிக்கை – ரயிலின் மேல் ஏறி பயணித்தவர் மரணம்

ஹொரப்பே பகுதியில் ரயிலின் மேல் ஏறி பயணித்த பயணியொருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் மேல் ஏறி வந்த பயணியொருவர் ஹொரப்பே பகுதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
ரயில் சாரதிகள் சிலர் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பயணிகள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பல ரயில் சேவைகளை இரத்து செய்ய நேரிடும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)