மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் : பின்னனியில் வெளியான காரணம்
அண்மையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் சிறைச்சாலையில் விஷம் அருந்திய சம்பவம் தொடர்பில் அடுருப்பு வீதி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
ஜிந்துபிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு பார்வையாளர் ஒருவர் விஷம் கலந்த பால் பொதிகளை வழங்கிய சந்தர்ப்பத்தில் குறித்த அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
நேற்று பால் பொதிகளை உட்கொண்ட சந்தேக நபர்கள் மயங்கி விழுந்து ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் சேருநுவர பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடையவர் மற்றும் கொழும்பு 13 ஐ வசிப்பிடமாக கொண்ட 29 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஜிந்துபிட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.