Site icon Tamil News

அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று மாதங்கள் கால அவகாசம்

அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

அதானி குழுமத்திற்கு எதிராக பங்குச் சந்தை தொடர்பான நிதிக் கட்டணங்கள் உள்ளிட்ட 08 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக நாட்டின் பங்கு பரிவர்த்தனை சபைக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடத்தப்பட வேண்டிய விசாரணைகள் கடந்த மார்ச் மாதமே நிறைவடையவிருந்தது.

எனினும், அதனை நிறைவு செய்ய முடியாத காரணத்தினால், உச்ச நீதிமன்றம் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை சபையிடம் மேலும் 06 மாத கால அவகாசம் கோரியது.

இந்திய உச்ச நீதிமன்றம் கோரிக்கையை பரிசீலித்து மூன்று மாத கால அவகாசம் வழங்கியது.

விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version