Site icon Tamil News

பிரான்ஸில் அச்சுறுத்தும் ஆபத்து – தீவிரமடையும் பாதிப்பு

பிரான்ஸில் டெங்கு நுளம்பு பரவல் தீவிரமடைந்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மே 1 ஆம் திகதியில் இருந்து இதுவரை பிரான்சில் 36 பேருக்கு டெங்கு காய்ச்சல் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் எவருமே அண்மையில் வெளிநாடுகளுக்கு சென்றிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள்ளும் டெங்கு காய்ச்சல் நோயாளி ஒருவர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் டெங்கு நுளம்பை அழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. பல நகரங்களில் கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

Exit mobile version