Site icon Tamil News

சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமாக ஒளிரும் பொருளை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமாக ஒளிரும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் (ESO) VLT எனப்படும் மிகப்பெரிய தொலைநோக்கி மூலம் இதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுவரை எங்கும் கண்டிராத அளவுக்கு இது மிகவும் பிரகாசமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் கருந்துளைகளைக் கொண்டு விண்மீன் திரள்கள் சூழ்ந்து ஒளிர்வது குவாசர்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த கருந்துளைகளில் வாயு மற்றும் தூசிகள் அண்டும்போது மின்காந்த கதிர்வீச்சு வெளிப்படுகிறது.

இதுவே இதன் ஒளிரும் தன்மைக்குக் காரணமாக அமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குறிப்பிட்ட குவாசர்ஸ் வேகமாக வளர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமுடைய இந்த குவாசர்ஸுக்கு J0529-4351 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த குவாசர் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால், அதன் ஒளி நம்மை வந்தடைய 12 பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொண்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version